காதல் எல்லா உயிர்களுக்கும் எல்லாப் பருவங்களிலும் ஏற்படும் இயற்கையான உணர்வு. இனக்கவர்ச்சி, காதல், பாசம், நேசம், ப்ரியம், ஈர்ப்பு, பரஸ்பர தேடல், இரு உயிர்களுக்கிடையில் ஏற்படும் பிரிக்கவியலா பிணைப்பு காதல்.இயல்வாழ்வில் சங்கடங்களைத் தோற்றுவிப்பதும், பிடித்தவர்களைப் பிடிக்குள் வைக்கத் தூண்டுவதும், தன் உலகத்துக்குள் அடக்கிவிடத் தோன்றுவதும் காதல். அடர் தருக்கள் அடங்கிய, பல்லுயிர் ஓம்பும் வனம் போல் சாகசங்களும் சுவாரசியங்களும் நிரம்பியதுதானே காதல்.