‘அண்டரண்ட பச்சி’ கைப்பிரதியைப் படிச்சுப் பார்த்த இளவேனில், ‘இது ஒரு மாதிரி இருக்குப்பா... செக்ஸா தெரியுது. இதைப் படிச்சுட்டு போலீஸ் நடவடிக்கை ஏதும் வருமான்னு தெரியல’ன்னான்!
அந்தக்காலத்துல, எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் ‘முதலிரவு’ன்னு ஒரு கதை எழுதினார். அதுக்காக அவரை ஒரு மாசம் ஜெயில்ல போட்டுட்டாங்க. எழுத்துக்காக ஜெயிலுக்குப் போன ஒரே தமிழ் எழுத்தாளர் அவராகவே இருக்கட்டும். நாம் இந்த வயசுல ஜெயிலுக்குப் போயி சங்கடப்பட வேண்டாம்னு யோசிச்சேன்.
ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். அவருக்குப் பிரதியை அனுப்பி, ‘படிச்சுப் பார்த்துட்டு அபிப்பிராயம் சொல்லுங்கோ. உங்களுக்குத் தெரிஞ்ச லாயர் யாரேனும் இருந்தாலும் ஆலோசனை பண்ணிச் சொல்லுங்கோ... பிரச்னை ஏதும் வருமா?’ன்னு கேட்டிருந்தேன்.
அவரும் படிச்சுப் பார்த்துட்டு, ‘எனக்கு இது ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆபாசமாக எதுவும் இல்லை... அற்புதமாய் நிறைய விஷயங்கள் சொல்றீங்க... அதெப்படி இதாகும்? ஆனாலும் யோசிச்சுக்கிடுங்க..!’ என்றார்.
No product review yet. Be the first to review this product.