அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் பதிவாளர், வேதிப் பொறியியல் துறைப் பேராசிரியர், தலைவர், முனைவர் பழ.சபாரெத்தினம் எழுதியுள்ள முதல் நூல் ‘வழிகாட்டும் வள்ளுவம்’ அனைவரின் பாராட்டினைப் பெற்றுத் திகழ்கின்றது.
‘தமிழரின் அளவை முறைகளும், கணக்குப் புதிர்களும்’ எனும் இந்நூலின் முதற்பகுதியில் தமிழரின் அளவை முறைகளான நீட்டல், நிறுத்தல், கால, எண்ணல் அளவைகளைத் தொகுத்தும் விரித்தும் சொல்லியுள்ளார். அதோடு, சிற்ப அளவைகளைப் பற்றித் தொகுத்தெழுதியுள்ளது சிறப்பு. ‘கணினி - ஓர் அறிமுகம்’ எனும் பகுதி சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பதில் அடங்கும்.
இரண்டாம் பகுதி, ‘மாயச்சதுரங்கள்’, ‘சுடோகு’ உள்ளிட்ட கணக்குப் புதிர்களை உள்ளடக்கியது. சுடோகு தோன்றிய வரலாற்றைக் கூறியதோடு, அதனைத் தீர்க்கும் வழிகளையும் விளக்கியுள்ளார். எண்களில் மட்டுமல்லாது எழுத்துகளைக் கொண்டு சுடோகு புதிரை உண்டாக்கலாம் என்று சொல்லி, தமிழ் உயிரெழுத்துகளில் சுடோகு என்ற புதிய சுடோகுவை அறிமுகப்படுத்தியுள்ளார். பழந்தமிழரின் கணக்குப் புதிர்களுக்கு இயற்கணிதம் (algebra) கொண்டு விடை கண்டுள்ளார். இறுதியாக நினைவாற்றலைப் பெருக்கிக் கொள்ள ஏதுவான வழிவகைகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
முனைவர் செ.நாகநாதன்
முதல்வர் (பொறுப்பு)
இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி
No product review yet. Be the first to review this product.