ஆதாமுக்கு ஆபில் காபில் என்று இரண்டு மகன்கள் உண்டு. அகங்காரம் பிடித்த ஒருவன் தனது உடன் பிறந்தானை பொறாமையில் கொன்று விட்டு என்ன செய்வதென்று அறியாது தவிக்கும் போது ஒர் காகம் தோன்றி இறந்து போன மற்றொரு காகத்தை குழி தோண்டி புதைக்க அது கண்ட ஆதாமின் மகனும் அவ்வாறே செய்தான் என்பது இஸ்லாமிய, கிறிஸ்துவ, யூத பண்பாட்டு விழுமியங்களின் ஆதிகதை என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த நன்றிக் கடனின் எச்சம் தான் இறந்தவர்களுக்கான பிண்டம். திதி. பித்ரு. படையல் எல்லாவற்றிலும் காகத்தை ஆரம்பமாய் முன் நிறுத்துவதாக கூட இருக்கலாம்.
தமிழக கடற்புரமான இணையம் புத்தன்துறை ஊரில் இருந்து சிரியா நாட்டின் அலிப்போ வரை இந்த கதையை சுமந்து செல்ல காகமே துணை நின்றதால் கடற்காகம் பெயர் உருபெற்றது.
மணலில் நீந்தி கரை சேராத மனித வாழ்வின் தர்க்கங்கள் கேள்வியும் பதிலுமாய் முளைத்து நிற்பதை நாவலின் வழியே சொற்பமாய் சொல்ல முனைந்துள்ளேன்.
No product review yet. Be the first to review this product.