எதுவுமற்றுப்போனாலும் லெளகீக இழப்புகளை நிர்தாசண்யமாக உணர மறுத்த, வசதி வசீகரங்களுக்கு முதுகு காட்டி கலை நம்பிக்கையின் கதியில், கலை தரும் பரவசத்தின் முகமலர்ச்சி ஒன்றில் மட்டுமே உயிர்த்து உலவும் அவருக்கு அற்புதம்போல ஒரு காதல் வாய்க்கிறது. தற்செயல்களின் கரத்திலிருந்து சுரந்து காதலின் மதுரப் பின்னல் ஒரு பிரத்தியேகம் கொள்கிறது வாழ்க்கை. அந்தச் சுடர் பற்றிக்கொள்ளத் தயங்கிச் சிணுங்கி, குழைந்து சரிந்து, மங்கிச் சிறுத்து இறுதியில் ஆறஅமர நிறெரிந்து பிரகாச எழில் காட்டுகிறது.
களிகூர்ந்து ஒரு பாத்திரம் அனிதா. பக்குவம், முதிர்ச்சி, கனிவு, காதல், பெருந்தன்மை கொண்டு மேன்மையில் திகழ்கிறார். நான் வாசித்த சிறப்பான பாத்திரங்களின் வரிசையில் அவர் சென்று அமர்வதன் கம்பீரத்தை நான் ரசிக்கிறேன்.
புதியதான ஒரு காளத்தில் மாறுபட்ட நேர்த்தி பாவிய சொல்முறையில் எழும்பியுள்ளது இந்த நாவல், இதன் கலை சார்ந்து உரையாடல்கள் வாசகருக்கு அதன்பாற்பட்டு மேலதிக சிரத்தைகொள்ள ஏதுவாகும் என்று எண்ணுகிறேன்.
- யூமா வாசுகி