கதைக்கு, கதை அம்சம் பலகீனமாய் சுட்டுவார்கள். ஆனால் தேர்ந்த கதாசிரியனின் திறமை, கதையைக் கதையல்லாமலும், கதையல்லாததைக் கதையாகவும் கலைத்தரத்திற்கு குந்தகம் வராமலும் செய்வதில் வெளிப்படும். இங்கே கதைப்பின்னல் இருக்கிறது. ஆனால் அது அசல்வாழ்வின் அசுவாரஸ்யத்திலிருந்து ஆசிரியர் கண்டுகொண்டவை. அவற்றை சுவாரஸ்யமாகச் சொல்வதில்தான் இவருடைய செய்நேர்த்தி தனித்துவப்பட்டிருக்கிறது.
மதம் மாறினாலும், செய்யும் தொழிலால் மாறிவந்த சமூகத்தினரிடம் இருக்கும் இளக்கார உணர்வையெல்லாம் நளினமாக நயம்பட முதலில் சொன்ன பெருமை புத்தம் வீடு, செல்லப்பா போன்ற நாவல்களைப் படைத்த ஹெப்சிபா ஜேசுதாசனை சாரும். பிறகு ஐசக் அருமைராஜன் போன்ற எழுத்தாளர்கள் இவர்களின் வாழ்க்கையின் வெவ்வேறு பரிமாணங்களையும், பரிணாமங்களையும் கையாண்டிருந்தாலும், இப்போது அது குமாரசெல்வாவிடம் வந்து சேரும்போது ஒரு புதுவேகத்துடன் தீவிரமும், அழுத்தமும் பெற்றிருக்கிறது.
நீலபத்மநாபன், டிச.2013 ‘தீராநதி’யில்
No product review yet. Be the first to review this product.