சாதியொழிப்புக் களத்தில் வீரஞ்செறிந்த போராட்டத்தை முன்னெடுத்த தியாகி இமானுவேல் சேகரன், நூற்றாண்டை நோக்கி வீறுநடை போட்டுக்கொண்டிருந்தார். தனது அர்ப்பணிப்பு மிகுந்த களச்செயல்பாடுகளால் உழைக்கும் மக்களின் உள்ளத்தில் - சிந்தனையில் - வாழ்வியல் பண்பாட்டில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். சுயமரியாதை - சமத்துவம் - சகோரதத்துவம் கோரும் இமானுவேல் சேகரனின் வரலாறு, மக்கள் உரிமைப் போராட்டத்தில் நிற்பவர்களுக்கு இன்றும் வழிகாட்டியாய்த் திகழ்கிறது.
நாடு போற்றும் நாயகனான இமானுவேல் சேகரனை, இன்றைய தலைமுறையினர் வெறுமனே தரிசிக்க முற்படுவதைத் தவிர்த்து, அவர் விட்டுச்சென்ற இலட்சியப் பாதையைச் செழுமைப்படுத்தி, அடைய வேண்டிய இலக்கை நோக்கி அணியமாக வேண்டியது அவரின் தியாகத்துக்குப் பொருத்தமான செயலாக இருக்கும். அதற்கு, தியாகி இமானுவேல் சேகரன் அவர்களைப் பற்றிய வாசிப்பு மிகவும் அவசியமானதாகிறது.
No product review yet. Be the first to review this product.