விவசாயி விளைவித்த பஞ்சுகளுக்கு உரியவிலை கிடைக்காமல் தங்களுக்குள் மில் முதலாளிகள் ‘சிண்டிகேட்’ அமைத்து காட்டன் மார்க்கெட்டில் விலை குறைத்து வயிற்றிலடிக்கும் காரியத்தை கதையில் காமுத்துரை இலாவகமாகக் கையாண்டுள்ளார். பருத்தி வர்த்தகத்தின் பவிசு புரிகிறது.
சங்கம் வைத்தே தீருவது என்று முடிவுக்குப் பின்னர் அதை ஒழித்தே தீருவது என்ற முதலாளியின் திட்டம் ஒருவழியாக நிறைவேறி, ஆலை இயங்க மாற்றாக இளம்பெண்களை ஊர்தோறும் அள்ளிக்கொண்டு ஆலைக்குள் இறக்கி வேலை வாங்கும் தந்திரச் செயல். முதலாளிகளின் இன்றைய சுரண்டல் சுமங்கலித் திட்டத்தை நினைவுபடுத்துகிறது. நவீன நிர்வாகவியலை நன்றாகவே வெளிச்சமிட்டுள்ளார்.
வெகு காலத்திற்குப் பின் நல்லதொரு நாவலைப் படித்த நிம்மதி நிச்சயம் வாசகர்களுக்குக் கிடைக்கும்.
- க.குணசேகரன்
No product review yet. Be the first to review this product.