மலையுச்சியில் ஊற்றெடுத்த கணத்திலிருந்து நதியைப் போல நழுவிச்சென்று
கொண்டேயிருக்கும், இடையறாத நனவெழுச்சி பொங்கிப்பெருகியோடும் ஒரு
கதைசொல்லியின் குரல். அந்த நதியில் பழுத்த இலைகளாய் மிதந்து செல்லும்
எதிர்பாரா தக்கை நிகழ்வுகள். தண்ணென்று கனிந்த நிலவாய்
ஆழத்தில் எதிரொளிக்கும் கதைசொல்லியின் கனலும் இருப்பு. பெண் உடல்பிம்பம்
உடைபடும் தருணங்களும், அதன் அடியில் இழுபடும் அறுந்திடாத அறத்தின்
கயிறுகளும் நூறாயிரம் அழியாச்சொற்களும் அவளை இடையறாது தனிமையின்
நதியாய் பாய்ந்திடத்தூண்டுகின்றன. ஒரு முறை கால் வைத்த கணத்தில் மீண்டும் கால் வைக்க
முடியாத பேருவகை வாழ்க்கை. கதையினுள்ளே கதை என்று சுருள் சுருளாய்க்
கதைவெளிக்குள் அழைத்துச்செல்லும் இடையறா இயக்கத்தின் குறியீடே
அழியாச்சொல். “அழியாச் சொல்”, குட்டி ரேவதியின் முதல் நாவல்.
No product review yet. Be the first to review this product.