பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நாவல் “பால்யகால் சகி” ,
இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து
வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான்.
பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும்
உணர்ச்சிப்பெருக்கும் கொண்ட நாவலாகும்.
எழுத்தின் கூறுகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாகத் திரண்டிருப்பது தான் நாவலை
இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்ககூடியதாகவும் ஆக்குகிறது.
இக்குறுநாவலுக்கு இன்று உருவாகியிருக்கும் செவ்வியல்
தகுதியும், அதனால்தான்.
தோற்ற காதலின் தீராத வலி ’பால்யகால சகி’.