தங்களுக்கு எதிரானவர்களை, உடன்பட்டுப் போகாதவர்களை, மீறுபவர்களை எதிரிகளாகப் பாவித்து. சித்ரவதை செய்து கொல்லும் கொடுமைக்கு. உலகத்தில் பெரிய நாடு, சிறிய நாடு என்ற பேதமெல்லாமல் இல்லை. சர்வ நிலைகளிலும் சித்ரவதைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதற்கு. இந்த நாவல் ஒரு சாட்சி.
மொராக்கோ அரசர் ஹாசன் II க்கு எதிரான சதித்திட்டத்தில் காய்களாகப் பயன்படுத்தப்பட்டு. சதிக்கு சம்பந்தமில்லாமல் கைதான ராணுவ வீரர்களின் மீதி வாழ்க்கையைப் பற்றி பேசும். இந்நாவல் பாலைவன ரகசிய இருட்டுச் சிறையான மொராக்கோ - தஜ்மாமார்ட்டில் நிகழ்ந்தக் காட்சிகளைப் படிமங்களாகச் சித்தரிக்கின்றது.