நூலின் பெயர் : மனவாசம்
ஆசிரியர் பெயர் : கவியரசு கண்ணதாசன்
புத்தகத்தை பற்றி
1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பது க்கும் பிந்தைய நாளில் உள்ள எமது சுய சரிதை மனவாசம் என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது.சொந்த நிறை குறைகளையும் தொழில் முறை ஏற்ற இறக்கங்களையும் தான் சார்ந்த கட்சிகளின் தலைவர்களால் தமக்கு ஏற்பட்ட பொருள் இழப்புகளையும், அதனால் தோன்றிய மன காயங்களையும் சுய விமர்சனம் செய்து கவிஞர் கவிஞர் சுய சரிதை எழுதியுள்ளார்.
ஆசிரியர் குறிப்பு
ஆரம்ப காலத்தில் பகுத்தறிவு என்ற போர்வையில் நடந்த நாத்திக பிரசாரத்தில் மூழ்கிய கண்ணதாசன், அதிலுள்ள ஏமாற்றுவித்தையை உணர்ந்து ஆத்திகப் பாதைக்கு திரும்பினார். ஆரம்ப காலத்து திமுக தலைவர்களுள் ஒருவராக விளங்கிய கண்ணதாசன், அரசியலில் துரோகமும் சுயநலமும் கோலோச்சுவது கண்டு விரக்தியுற்று அதிலிருந்து விலகினார். சில காலம் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்த (காண்க: மனவாசம்) அவர் அரசியல் தனக்கு ஒத்துவராது என்று முற்றிலும் விலகினார்.
கண்ணதாசனின் ஆளுமை என்பது, அவரது சாகாவரம் பெற்ற இலக்கியங்களில் தான் நிலைகொண்டுள்ளது. நான்காயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகள், ஐயாயிரத்திற்கு மேற்பட்ட திரைப்பாடல்கள், அற்புதமான துள்ளுதமிழ் நடையுடன் கூடிய நூல்கள், கட்டுரைகள், சிறு காப்பியங்கள், நவீனங்களை எழுதியது கண்ணதாசனின் சாதனை. தமிழில் புதிய மறுமலர்ச்சியை பாரதிக்குப் பிறகு ஏற்படுத்தியவர் கண்ணதாசனே.
Book Name : vanavasam
Book writer : Kaviyarasu Kannadasan
Translator :
Book Name : Manavasam
Book writer : Kaviyarasu Kannadasan
Buy Tamil Book : Available
No product review yet. Be the first to review this product.