கவிஞர் கண்ணதாசனின் சுயசரிதை. 1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியிருக்கிறேன்.எனது மேன்மைகள் என்று நான் கொரிபிடுபவற்றை நான் பயத்துடனே குறிப்பிட்டுள்ளேன்.ஒரு பெரிய அரசியல் தலைவனின் வரலாறும் அல்ல இது,ஒரு பெரிய கவிஞனின் வாழகையுமல்ல.வாழ்கை வலி போக்கன் ஒருவனின் உயர்வு தாழ்வுகளே இந்நூல். ஏனென்றால்,என் காலத்துக்கு பிறகு இது ஓர் அதிசயமாக இருக்கும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு.-கண்ணதாசன வனவாசம்´ என்பது, கண்ணதாசனின் சுயசரிதை. அவர் வாழ்க்கையில் நடந்தையெல்லாம் அருமையாக எடுத்துச் சொல்லியிருப்பார். அதில் தான் அண்ணா, கருணாவின் நடத்தைகளையெல்லாம் புட்டுபுட்டு வைத்திருப்பார். வேறு யாராவது எழுதி இருந்தால் அச்செய்திக்கு முக்கியத்துவம் வந்திருக்காது. ´கிசு கிசு´ போல் பலவீனமாகி இருந்திருக்கும். ஆனால், கண்ணதாசன் தி.மு.க தலைவர்களின் நடத்தையை அம்பலப்படுத்திய போது சம்பந்தப்பட்டவர்களே வாயை திறக்கவில்லை என்பதோடு, கண்ணதாசன் தன்னுடைய நடத்தைகள் குறித்தும் பகிரங்கமாகவே எழுதியிருக்கிறார் கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கை கட்டுப்பாடற்றது. மனித பலவீனங்களுக்கு சாட்சியாக விளங்குவது. அதை அவரே தனது சுயசரிதையில் கூறி இருக்கிறார். '' நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழுங்கள்'' என்பதே கண்ணதாசனின் சுயபிரகடனம். ஆசிரியர் குறிப்பு நாவல்கள் : - 1. அவள் ஒரு இந்துப் பெண் 2. சிவப்புக்கல் முக்குத்தி 3. ரத்த புஷபங்கள் 4. சுவர்ணா சரஸவதி 5. நடந்த கதை 6. மிசா 7. சுருதி சேராத ராகங்கள் 8. முப்பது நாளும் பவுர்ணமி 9. அரங்கமும் அந்தரங்கமும் 10. ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி 11. தெய்வத் திருமணங்கள் 12. ஆயிரங்கால் மண்டபம் 13. காதல் கொண்ட தென்னாடு 14. அதைவிட ரகசியம் 15. ஒரு கவிஞனின் கதை 16. சிங்காரி பார்த்த சென்னை 17. வேலங்காட்டியூர் விழா 18. விளக்கு மட்டுமா சிவப்பு 19. வனவாசம் 20. அத்வைத ரகசியம் 21. பிருந்தாவனம் வாழ்க்கைச்சரிதம் : - 1. எனது வசந்த காலங்கள் 2. எனது சுயசரிதம் 3. வனவாசம்
கட்டுரைகள் : - 1. கடைசிப்பக்கம் 2. போய் வருகிறேன் 3. அந்தி, சந்தி, அர்த்தஜாமம் 4. நான் பார்த்த அரசியல் 5. எண்ணங்கள் 6. தாயகங்கள் 7. கட்டுரைகள் 8. வாழ்க்கை என்னும் சோலையிலே 9. குடும்பசுகம் 10. ஞானாம்பிகா 11. ராகமாலிகா 12. இலக்கியத்தில் காதல் 13. தோட்டத்து மலர்கள் 14. இலக்கிய யுத்தங்கள் 15. போய் வருகிறேன்
நாடகங்கள் : - 1. அனார்கலி 2. சிவகங்கைச்சீமை 3. ராஜ தண்டனை
கவிதை நூல்கள் : - 1. கண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில் 2. திரைப்படப் பாடல்கள் - 2 பாகங்களில் 3. பாடிக்கொடுத்த மங்களங்கள் 4. கவிதாஞ்சலி 5. தாய்ப்பாவை 6. ஸ்ரீகிருஷண கவசம் 7. அவளுக்கு ஒரு பாடல் 8. சுருதி சேராத ராகங்கள் 9. முற்றுப்பெறாத காவியங்கள் 10. பஜகோவிந்தம் 11. கிருஷண அந்தாதி, 12. கிருஷண கானம்
Book Name
No product review yet. Be the first to review this product.