ஏரிக்கரையில் வசிப்பவன்
பல்வேறு கவிதைகளை அவன் ஏரிக்கரையில் எழுதியிருக்கிறான், சிக்கலான, சூட்சும்மான கவிதைகளை அதன் மடியில் அமர்ந்து வாசித்திருக்கிறான்.
சிகரெட்
எவனோ என் தலையைத் திறந்து
மூளையின் ஒவ்வொரு அடுக்கிலும் சிகரெட்டுகளை
அடுக்கி வைத்துச் சென்றிருக்கவேண்டும் இல்லையெனில்
ஏன் எனக்குப் பார்க்கும்போது பார்க்காதபோதும் கூட
சிகரெட் பிடிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.