இந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனைவருமே முற்றுந் துறந்த முனிவர்களல்லர். எல்லாம் அறிந்த ஞானிகள் அல்லர். அனைத்தும் சாத்தியமான சாதனையாளரும் அல்லர். ஆனால், அவர்களுக்குரிய சிறுவட்டத்தில் ஒளியைக் காண முயற்சி புரிபவர்கள். இவர்கள் பயணம் தொடக்க நிலையிலேயே இருக்கலாம். ஆனால், இவர்கள் முடங்கிப் போய்விடவில்லை. இவர்கள் பயணம் நிச்சயம் என்றால், என்றோ ஒரு நாள் இவர்கள் எல்லைக் கோட்டினை அடைவது நிச்சயம்.