இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன் வைப்பது. மாறூதல்கள் அனைத்தும், வளர்ச்சியும் கூட , இழப்புகளையும் வலிகளையும் உறுவாக்குகிறது. அஎந்த அமுதக்கடலும் கடையப்பட்டாலும் விஷத்தையே உமிலும்போலும்.
ஒரு நெடுங்கதையாக எழுதப்பட்ட ஒரு திரைப்பட இயக்குனரின் வாழ்க்கை வரலாறே இந்நூல். தோல்வியடைந்த ஒரு திரைப்பட இயக்குனரின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களும் அவரை சுற்றி நிகழும் நிகழ்வுகளையும் உள்ளது உள்ளபடி கொண்டு சென்று கன்னியாகுமரியை கதைக்களனாக மட்டுமின்றி இயக்குனரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு இடமாக குறிப்பிட்டு இந்த கதையை பின்னி இருக்கிறார் ஜெயமோகன்