உரச் சாக்குப் பைக்குள் புத்தகங்களை திணித்துக் கொண்டு ஊராட்சி ஒன்றிய தடக்கப் பள்ளிக்குள் படிக்க நுழைந்த ரவிச்சந்திரன்,அமெரிக்காவில் விஞ்ஞானி ‘கிரஹாம் பெல்’ நிறுவிய ஆராய்ச்சிக் கூடத்தில் பணியாற்றி தற்போது அமெரிக்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஆசிய பசிபிக் வட்டார தலைமை பொறுப்பில் உட்காந்திருந்தாலும் சுய தம்பட்டம் இன்றி தான் பிறந்த ‘வெட்டிக்காடு’ வேர் தேடி இழைகின்றார்.
உணர்வுப் பூர்வமானவற்றையே இலக்கியம் என்பேன்.வாசகனை இழுத்துப் பிடித்து, அவரவர் காலடி தடங்களை தேடி அலைய விடும் எழுத்து,ரவிச்சந்திரனின் ’வெட்டிக்காடு’.