உருமாற்றம் :
சமூக அதிகாரத்தின் அபத்தமான அமைப்பும் சட்டங்களும் தம் கண்ணுக்குத் தெரியாத கைகளால் நவீன மனிதனை ஒடுக்கி அவனைப் பதற்றத்துக்கும் குழப்பத்துக்கும் ஆளாக்குவதைப் பதிவு செய்யும் இவருடைய எழுத்தில் நாம் காணும் நாயகப் பாத்திரங்கள் காஃப்காவும் நாமும்தான். Kafkaesque என்ற பெயரடை ஆங்கில அகராதிகளில் இடம்பெற்றுவிட்டது. ‘ குழப்பமூட்டுகிற, அச்சுறுத்துகிற சூழ்நிலையை, குறிப்பாக எவ்வித அர்த்தத்தையும் தராத சிக்கலான அதிகார அமைப்பின் விதிகளும் ஒழுங்குமுறைகளும் உள்ளடங்க்கிய சூழ்நிலையைக் குறிக்கப் பயன்படுகிறது’ என்ற விளக்கத்துடன் ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி இச்சொல்லைப் பட்டியலிட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையை அனுபவிக்காத நவீன கால மிகச் சொற்பம் என்ற உண்மையே அவருடைய எழுத்தின் பொதுமையை உணர்த்தும்.