உலகத்தி ஒருவன்
கண்கள் குளமாகிவிட்டன. அந்நியம் இறைக்கும் கண்ணீர். இடமும் வாசகனையும் காட்சிகளும் அவனறியாதவையாக இருக்க தன்னிலிருந்து கரைந்தழிந்து போகும் பழகியவற்றின் வாசனையை இழந்துகொண்டு ஏதிலியாய் நிற்பவன் தனக்குச் சிறகு முளைக்கவேண்டும் என்று ஓரிரு நாட்களாய் பிரார்த்திக்கின்றான். கடவுள் கறுக்காமல் அவற்றை அவனுக்குக் கொடுத்துவிடுகிறார் என்றும் நம்பினான். சிறகுகள் முளைத்தபின்னால் ஊருக்குப் பறந்துபோவான். எப்படிப் போகவேண்டும் என்று தடம் தெரியாதுதான், ஆனால் ஊரின் திசை நோக்கிப் பறப்பான். வழிதவற வைக்கக்கூடிய எதுவும் ஆகாயத்தில் இல்லையென்று உறுதியாக நம்பினான்.