பெண்ணியக் கருத்துகள் இலக்கியத்தில் இடம்பெற்ற சரித்திரத்தை அறியும் முன் தமிழ்ப் பண்பாடு பெண்களை எவ்வாறு நோக்கியுள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பண்பாட்டிலிருந்து உருவாகும் பேச்சுமொழியிலும் எவ்வாறு நோக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது எந்தப்பண்பாடு வெளியிலிருந்துகொண்டு பெண்கள் இயங்கியிருக்கிறார்கள் என்பது புரியும்.