8 நாட்டுப்புறக்கதைகளின் தொகுப்பான ‘திற்கோடூர் நாவல்கள்’ ‘திற்கோட்டூர்’ என்ற கிராமத்தின் பின்னணியில் எழுதப்பட்டது. தற்போதைய நவீனப்
போக்குகளிலிருந்து விலகி, அவரது கிராம மக்களின் வாய் மொழியில் மக்களின் நம்பிக்கை, பழக்க வழக்கங்கள் வடக்கு மலபாரில் நடைபெறும் கோயில்
கொடை முதலியவற்றை மிகவும் தத்ரூபமாகக் கற்பனை கலக்காமல் எழுதி வருகிறார். யு.எ.காதரின் இலக்கியப் படைப்புகள் வரலாற்று, மொழிரீதியாகப்
பெரும் சேவை புரிகின்றன. வாசகர்களுக்குப் பழைமையான கேரளத்தின் உண்மையான சித்திரம் இவற்றின் மூலம் கிடைக்கிறது.