சீர் குலைந்த பொருளாதாரச் சூழலில் பணம் ஈட்டுவதே அறம், பிழைப்பே சாகசம் என வகுத்துக் கொண்ட புதிய பாதையில் நேர்மையை சமரசம் செய்கிறோம் என்பதை அறியாமல் குற்றவியலே வாழ்வு என்பது இயல்பான நிகழ்வாகிறது. அதன் விளைவுகள்தான் இன்றும் உலகெங்கும் எதிரொலிக்கும் இந்த நாட்டின் குற்றத்தின் குரல்கள். அப்படியானதொரு சூழலில் தன்னைத் தானே நிர்வகித்துக் கொண்டு வாழ்பவன் தான் இந்தப் புதினத்தின் நாயகன்.
இத்தகைய பின்னணியில், பெண்கள் புறத்தில் மட்டுமின்றி அகத்திலும் மேற்கொள்ளும் பயணம் பற்றி இப் புதினம் மிகவும் விளக்கமாக சித்தரிக்கிறது. பல தார மணம் சாதாரணமாகவும், குற்றமற்றதாகவும் இருக்கும் சமூகச் சூழலில், கைவிடப் பட்டு விடுவோமோ என்னும் பாதுகாப்பின்மை வாழ்நாள் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு பெண்ணின் வாழ்வென்பது பிழைத்தலின்றி வேறெதுவுமில்லை. அப்படியோர் இயந்திரத் தனமான வாழ்வோட்டத்தில் , வாழ்வின் ருசி என்னவென்பதையே அறியாமல் , கட்டுப் பாடான சூழலில், ஒடுக்கப் பட்ட பாலியல் உணர்வுகளின் ஏக்கத்தின் மீதங்களை மனதில் புதைத்தவாறே மடிந்து விடும் பெண்கள் பெரும்பாலும் உள்ளனர். அவர்கள் அந்த நாட்டுக்கு மட்டும் உரியவர்களா என்றால், அப்படி இல்லை. அந்தப் பெண்களின் குரல் மண்ணின் எல்லை கடந்து உலகெங்கும் ஒலிக்கும் குரல். ஒரு கட்டத்தில் இந்தக் கதை அது எழுதப் பட்ட நாட்டுக்கு மட்டுமின்றி பல வகைகளில் நமது பிரதேசத்துக்கும் வெகுவாகப் பொருந்திப் போகிறது...
No product review yet. Be the first to review this product.