தங்கள் அடையாளங்களைத் தேடித் தவிக்கும் இதயங்களை மையமாகக் கொண்ட இரண்டு நாவல்களிலும் இன்றைய நுகர்வு கலாச்சார உலகம் எதிர்கொள்ளும் சிதைந்த குடும்பம் சார்ந்த பெண்களின் நுணுக்கமான ஜீவ அவஸ்தைகள் புனைவுப்பிரதிகளாய் விரிந்து கிடக்கின்றன. முதல் கதையின் நிகழ்வுகள் ஜப்பான் கடலில் உள்ள யூதோ தீவிலும் அடுத்த கதைக்கான சம்பவங்கள் பாரீஸ் உள்ளிட்ட இடங்களிலும் புனையப்பட்டுள்ளன. இரண்டுமே சமகாலத்தவை.