சித்தார்த்தன் ‘விடுதலை வெட்கை’ நிலையில் இருந்து ‘விடுதலை பேறு’ நிலையை நோக்கிச் செய்த பயணத்தின் வரலாறாக அமைந்துள்ளது.இக்கதை வரலாற்றின் தொடக்கத்திலிருந்து அவனை இயக்கும் ஒரு சக்தி வரலாற்றின் இறுதியில் இயங்காது ஓங்கி நிற்கும் உள்ளோளியாகிறது.அவன் ஆன்றவித்து அடங்கிய கொள்கைச் சான்றோன் ஆகின்றான்.
“உனக்கு நான் தெய்வக் கண் தருகிறேன்.அதைக் கொண்டு உலகம் அனைத்தையும்-முக்காலத்தையும்-நோக்கு” என்று கிருஷ்ண பகவான் சொன்னதும்.அர்ஜுனன் பல கோரக் காட்சிகளைக் காண்கிறான்.ஆனால் அவற்றுள் எல்லாம் பகவானின் ஒவ்வொரு அங்கமும் காணப்பட்டது என்று கீதை சொல்லுகிறது.இதுபோலவே இந்த நூலிலும் ஒரு விஷ்வரூப தரிசனம் வர்ணிகப்படுகிறது.