தமிழர் விளையாட்டுகளைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் மிக குறைவு. அவ்வகையில் இரண்டாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பதிவுகளைக் கொண்ட சேவல்கட்டு விளையாட்டை மையப்படுத்தி நல்ல விவரணைகளுடன் உயிர்ப்பான பேச்சுமொழியில் எழுதப்பட்டுள்ள இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. அவ்விளையாட்டு ஒருபுறமும் விளையாட்டுக்கு நிகரான சுவாரசியம் கொண்ட வாழ்க்கை நிகழ்வுகள் ஒருபுறமுமாக இணைகோட்டில் இந்நாவல் செல்கிறது. நாவல் பாத்திரங்கள் பெருப்பான்மையும் ‘நல்லவர்’ களாகவும் குணவான்களாகவும் இருப்பது இன்றைய சூழலில் பெருத்த ஆசுவாசத்தைத் தறுகிறது.