ஒரு எழுத்தாளனுக்கு அவனுடைய குடும்பத்தில் கிடைக்கும் மரியாதையைப் பாருங்கள்.எதிர்பாராத தருணத்திலெல்லாம் சடார் சடார் என்று சாட்டையடி.ஒரே காரணம்,மற்ற தொழில்களைப்போல் எழுத்துக்குப் பணம் வருவதில்லை.அதனால் வீட்டில் பட்டினி,அவமரியாதை.கடைசியில் சிவராமன் தன் அத்தங்காள் பவானியையும் இரண்டாம் திருமணம் செய்துகொள்கிறான் என்று முடிகிறது ‘சர்மாவின் உயில்’ நாவல். “அப்போது இருதார தடுப்புச் சட்டம் இல்லை” என்று முன்னுரையில் எழுதுகிறார் க.நா.சு.
கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தமிழ் வாழ்க்கை எப்படி இருந்தது;அது எத்தகைய சீரழிவைச் சந்தித்தது;அதன் வாழ்வும் தாழ்வும் எப்படி அமைந்தது என்பதுதான் க.நா.சு நாவல்களின் மையப்புள்ளி. -சாரு நிவேதிதா