நேர்காணல்கள் கேட்கிறவருக்கும், கேட்கப்படுகிறவருக்குமான உளவியல் சார்ந்த ஒரு வித பத்திரிகை உத்தி.இன்றைக்கு அவை போலித்தனத்தாலும் சம்பிரதாயங்களாலும் உருவாக்கப்படுகிறது.தமிழ்ச்செல்வன் தேர்ந்து கொண்ட ஆளுமைகள் மக்களுக்கானவர்கள். மக்களுடன் இரண்டறக் கலந்து தத்தமது வெளிப்பாடுகளை நிகழ்த்துபவர்கள். இந்த ஒன்பது ஆளுமைகளீன் நேர்காணல்களை வாசிப்பதன் மூலம் வாசன் தமிழ்ச் சூழலின் சகல பாகங்களுக்குள்ளும் பிரவேசிக்கிறான்.பங்கு கொள்கிறான், எதிர்வினைகள் புரிய ஆயத்தமாகிறான்.