திருவாங்கூர் சமஸ்தானத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக திவானாகப் பணியாற்றி சாதனைகள் பல செய்து சரித்திரத்தில் இடம் பெற்றிருப்பவர் சர்.சி.பி என்று அழைக்கப்படுகின்ற சேத்துப்பட்டு பட்டாபிராம ஐயர் ராமசாமி. சர்சைகளின் மறுபெயர். சி.பி.சர்ச்சைகள் இல்லாமல் சி.பி.யால் உயிர்வாழ முடியாது. ஒன்று சர்ச்சைகளை தேடி இவர் போவார் அல்லது இவரைத் தேடி சர்சைகள் வரும்.
இந்தியாவிலேயே முதன் முதலில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர். காமராஜர் முதலமைச்சாராக இருந்தபோது சி.பி.யை பின்பற்றி தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது அவர் சி.பி.யை நினைவு கூறத் தவறவில்லை.