தமிழ்ப் புனைகதையின் களம் குடும்பப் பின்னணியிலிருந்து விலகி பரந்த பின்புலமாக உருப்பெற்று வந்த காலப் பகுதியில் எழுதபட்ட நாவல்
‘புனலும் மணலும்’ சம்பிரதாயமான குடும்பப் பின்னணியும் அதன் சிக்கல்களும் இந்த நாவலிலும் உண்டு.ஆனால் அந்தச் சிக்கல்கள் மட்டுமே நாவலின்
மையமல்ல ... இந்நாவலின் மீது சொல்லப்பட்ட விமர்சன்ங்களாஇப் பின் தள்ளிவிட்டு ‘புனலும் மணலும்’ நாவல் இன்றும் சமகாலத்தன்மையுடன்
நிலைத்திருக்கிறது இன்று பரவலாக விவாதிக்கப்படும் பிரச்சனைகளுடன் படைப்பு காலத்தைக் கடந்து உறவுகொண்டிருக்கிறது. நாவல் எழுதப்பட்டு
வாசிக்கப்பட்ட முன்கால மனநிலை இன்று மாறியபோது நாவல் நிகழ்காலத்துக்குரியதாக விளங்குவது, சமகாலப் பிரச்சனைகளின் தொடர்பால் என்று
கருதுகிறேன்.
மேலும் அழுத்தமாக சொல்வதென்றால் இன்றைய பிரச்சனன்கள் பற்றிய அறிகுறிகளை நாவல் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அடையாளம்
கண்டிருக்கிறது. படைப்பில் நிகழும் இந்த “ தீர்க்கதரிசனமே ‘ புனலும் மணாலும்’ நாவலை மறுவாசிப்பில் கூடுதல் கவனத்துக்குரியதாக்குகிறது.