‘பூக்குழி’யின் மூன்றாம் பதிப்பு இது.வாழ்வை ஒரு கோணத்தில் அணுகுவதை முதன்மையாக்கிப் பிற கோணங்களையும் கொண்டுவந்து முரண்களைக் கூர்மையாக்கிக் காட்டும் தன்மையில் எழுதப்பட்டது இது.பருண்மையல்லாத கருத்துக்களின்மீது நாம் கொண்டிருக்கும் பிடிமானமும் அவற்றைக் காப்பாற்ற எதையும் செய்ய தயாராக இருக்கும் வெறிநிலையும் என்னை வியப்படையச் செய்கின்றன;சலிப்புறவும் வைக்கின்றன.ஏன் நாம் வேறுபாடுகளை முன்னிலைப்படுத்துகிறோம்?அவற்றை இயல்பாகக் கடந்து அம்போடும் மகிழ்ச்சியோடும் வாழ இயலாதா?நம் சிந்தனையின் குறுக்கலுக்கு காரணம் என்ன?இந்தப் பிரபஞ்சம் தன் விரிவை ஏன் நமக்குள் கடத்தவில்லை?