சைலபதியின் நாவல் பருந்துப் பார்வையாக அந்த பயங்கரக் கனவின் முழுப் பரிமாணத்தையும் நம் கண்முன் வைக்கிறது. காதை செவிடாக்கும் இடைவிடாத மழையின் ஓசையில் மனம் பேதலித்துப் போன ஓர் இளைஞன் அவனுள் ஜீவகளையை ஏற்படுத்தப் போராடும் அன்பு மிக்க அவன் மனைவி, மழைக்கு பலி கொடுத்த காதலின் மாயத் தோற்றத்தோடு உறவாடும் காதலி, வறுமையிலும் அன்பும் பாசமும்மாக வாழும் இரவுக்காவலனின் குடும்பம்... என்று மிக அழகாக சென்னையில் வாழும் பல்வேறு விதமான மனிதர்களைப் படம்பிடிக்கிறது இந்த நாவல்.