நைஜீரியாவின் குறிப்பிடத்தகுந்த கருப்பர் இன பெண் எழுத்தாளரான புச்சி யமச்செட்டா(Buchi Emecheta) லாகோஸில் பிறந்தவர். கணவரால் கைவிடப்பட்டு தற்போது இங்கிலாந்தில் (இலண்டனில்) வசித்துவருகிறார். பயாஃப்ராவை நோக்கி (Distination Biafra) 1982ல் எழுதப்பட்ட நாவல்.
இது ஒரு முழுமையான நைஜீரிய அரசியல் நாவல். இக்போ என்றழைக்கப்படும் இனத்திற்கு எதிரான கோரப்படுகொலைகள், இன அழித்தொழிப்பு
வேலைகள் எவ்வாறு வல்லரசுகளின் திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்டன. இக்போக்களின் பயாஃப்ரா எனும் தனிதேசக் கனவுகள் எதேச்சதிகார
சக்திகளால் எங்கனம் முறியடிக்கப்பட்டன என்பனவற்றையெல்லாம் புச்சியமச்செட்டா உணர்வுப் பூர்வமாகப் பதிவு செய்துள்ளார். நெருடும் நைஜீரியப்
பெயர்களைத் தவிர்த்து நாவலெங்கும் நமக்கு அன்னியமாக எதையும் உணர முடியவில்லை. இரா.நடராசனின் ஆற்றொழுக்கான மொழிநடை
வாசகனுக்கு மிக நெருக்கமாக இருந்து நாவலைச் சரளமாக நகர்த்திச் செல்கிறது.