அழகு, எளிமை இரண்டையும் ஒருசேர தரிசிக்க வேண்டுமானல் பாரதியை வாசித்தால் போதும், நவீன தமிழ் கவிதை, உரைநடை, பாடல் மூன்றையும் நமக்கெல்லாம் அறிமுகம் செய்துவைத்தவர் அவர்தான். இதன் பொருள், பாரதியை அப்படியே அள்ளி எடுத்து இன்றைய தலைமுறையால் வாசித்து புரிந்து கொண்டுவிடமுடியும் என்பதல்ல. குறிப்பாக, பாஞ்சாலி சபதத்தின் அற்புத அழகையும் பொருள் சுவையையும் முழுமையாக உள்வாங்க வேண்டுமானால் இன்று புழங்கும் நடையில் எழுதப்பட்ட ஓர் உடை அவசியமாகிறது இந்தப்ப்புத்தகத்தின் நோக்கம் அதுதான்.