தேவிபாரதி என்ற எழுத்தாளரின் ஆக மேலான படைப்பு ‘நட்ராஜ் மகராஜ்’ என்று எண்ணுகிறேன்.கதையாடலில் நிகழ்த்தியிருக்கும் புதுமையிலும் கதைமாந்தர்களை உருவாக்கியிருக்கும் நேர்த்தியிலும் மொழியைப் பயன்படுத்தியிருக்கும் துல்லியத்திலும் செழுமையிலும் இந்த நாவல் அவரது படைப்பாற்றலின் உச்சத்தைக் காட்டுகிறது.இழை விலகாமல் நெய்ததுபோல் நாவலின் எதார்த்தமும் கற்பனையின் மாயமும் பின்னியிருக்கின்றன.