நந்திபுரத்து நாயகி
’நந்திபுரத்து’ நாயகியைப் படித்து விட்டு-தஞ்சைக்கு செல்பவர்கள் கண்களில் அந்த விமானம் தென்படும்போது, வெரும் விமானம் மட்டுமல்லாமல்-இன்பவல்லியின் காதல் சிகரமாகவும் தான் அது தோன்றும் என்பதில் ஐயமில்லை.
‘இன்பவல்லி-இராசராசன் தொடர்பு எப்படியிருந்தது? அது மற்றொரு காவியம்’ என்று கதையை முடிக்கிறார் ஆசிரியர். சரித்திரமும் சரித்திரக் கதையும் தொடரத்தான் செய்யும்.
மனித வாழ்க்கை என்ற ஜீவநதி என்றும் வற்றாமல் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அந்த ஜீவநதியின் ஒரு துறைதான் நந்திபுரத்து நாயகி. இதில் மூழ்கிக் குளிக்கும்போது கிடைக்கும் அனுபவம் மறக்க முடியாதது!
ஆசிரியர் : கலைமாமணி விக்கிரமன்