ரஷ்யாவில்,செய்ண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில்,ஒரு நாள் இரவு வெவ்வேறு பின்புலன்களைக் கொண்ட இருவர் சந்திக்கின்றனர்.ஒருவன்,ஷூட்டோவ்;பாரிஸுக்குப் புலம்பெயர்ந்த ரஷ்ய நாட்டவன்.பல ஆண்டுகள் கழித்து தன் தாய்நாட்டுக்கு வந்திருப்பவன்.இன்னொருவன் வோல்ஸ்கி;இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில் செய்ண்ட் பீட்டர்ஸ்பர்க் (அழைய பெயர்:லெனின்கிராட்) முற்றுகை இடப்பட்டபோதும்,பின்னர் ஸ்டாலின் 'அரசியல் தூய்மைப்படுத்துதல் கொள்கை’யை அமல்படுத்திய போதும்,சொல்லொணாத் துயரங்களை எதிர் கொண்டு தன் துணிவையும் மனித நேயத்தையும் நிலைநாட்டியவன்.இந்தச் சந்திப்பின்போது,சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு முன்னும்பின்னும் ரஷ்யாவில் ஏற்பட்ட ஏராளமான வரலாற்று நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன.அதேசமயம்,நிலையான உண்மையான மகிழ்ச்சியை எவ்வாறு அடையமுடியும் என்ற சிந்தனைக் கோட்பாடும் வெள்ளிடை மலையாக இந்நாவலில் வெளிப்படுகிறது.