மூங்கில் மூச்சு
மூங்கிலில் புல்லாங்குழல் செய்வார்கள் தெரியும். சுகா அதில் மந்திரக்கோல் செய்திருக்கிறார். அந்தக் காலத்தில் மத்தியதரக் குடும்பத்தில் அபூர்வமாக இருந்தன ரேடியோ பெட்டிகள். அவற்றில் ஒலித்த சிலோன் ரேடியோவும், ஒலிச்சித்திரங்களும் அந்தக் காலத்தை அப்படியே கண்முன்னே நிறுத்துகின்றன. நாங்கள் சிலோன் ரேடியாவின் மயில்வாகன்னின் மதுரமிக்க குரலால் கவரப்பட்டவர்கள் என்றால்... சுகா, அப்துல் ஹமீதினாலும், கே.எஸ்.ராஜாவினாலும், ராஜேஸ்வரி சண்முகத்தாலும் கவரப்பட்டவர். இது மூங்கில் விடும் மூச்சு மட்டுமே அல்ல... ஓர் இளைஞனின், ஒரு காலத்தின், ஒரு தலைமுறையின் சுவாசம்.
சுகா, விகடன் பிரசுரம், டிஸ்கவரி புக் பேலஸ்