மார்த்தாண்ட வர்ம்மா (1891): சி.வி.இராமன் பிள்ளை திருவாங்கூர் சமஸ்தான அரச குடும்பங்களைப் பற்றி எழுதிய மூன்று சிறந்த வலாற்று சிறப்பு மிக்க நாவல்களான தர்மராஜா,ராமராஜா மகதூர்,மார்த்தாண்ட வர்ம்மா முதலியனவாகும்.மேலோட்டமாக பார்க்கும் போது மார்த்தாண்ட வர்ம்மா கதை ஒரு காதல் காவியமாகத் தோன்றும்.ஆனால் இந்நாவல் முழுக்க முழுக்க அக்கால அரசியல் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.இந்த நாவலில் முக்கிய கதாபாத்திரமான சுபத்ராவை சுற்றியே கதை நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.