குடும்பம், கட்சி, மதம் என்னும் மூன்று நிறுவனங்களிலிருந்தும் அவற்றின் வரம்புகளிலிருந்தும் வெளியேறி வர வேண்டிய அவசியத்தை முன் வைக்கின்றது மரம். உறவு நிலைகளின் விரிசலையும் கட்சிக் கோட்பாடுகளின் உள்ளீடற்ற தன்மையையும் ஆன்மிக வெறுமையினையும் அம்பலப்படுத்துகின்றது. சிவகிரி என்னும் நகரின் நிலவியல் காட்சிகளுடன் ஓர் ஆழமான உரயாடலைக் கொண்டுள்ளது.