தாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது கிடையாது. அவரைப் பார்த்ததேகூட கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும்!
இது என்ன சுரண்டல் எண்ணம்? இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை? காலம் காலமாக மனிதன் நீடித்து இருப்பதே இப்படிச் சுரண்டுவதற்கும்
மாற்றான் முயற்சியின் பலன்களைத் தான் பறித்துக் கொள்வதற்கும் தானா?
” தலைமுறைகள் ‘ கதாநாயகன் சங்கரனுடைய சிந்தனையில் இப்படியும் எண்ணங்கள் எழுகின்றன. அவன் மீண்டும் சுரண்டல் வாழ்க்கையில்
ஆழ்ந்து விடுகிறான் என்றாலும் அவனுக்கும் இப்படிச் சிந்தனைகள் தோன்றின என்பதே நம்பிக்கைக்குரிய விஷயம். ஆனால், இந்த அளவு
ஈரப்பசைகள் ஒரு மனிதனுக்கு இல்லாது போய்விட்டால் இந்த உலகமும் வாழ்க்கையும் மதிப்பும் கண்ணியமும் அற்றவையாகிவிடும் .
- அசோகமித்திரன்