குறத்தி முடுக்கு
'குறத்தி முடுக்கு’ ஓர் இடமில்ல. ரத்தமும் நிணமும் சீழும் ஓயாமல் கசியும் ஆறாத ரணம். தான் உயிர்தப்ப, பல்லி துறந்த வால். பிறகு அதே பல்லியின் தினவுக்கு வடிகாலன அவலம். மும்பையின் காமாட்டிபுரா, கொல்கொத்தாவின் சோனாகாச்சி போல, தமிழ்நாட்டுத் திருநெல்வேலியில் ஜி.நாகராஜன் உருவக்கிய விலைப்பெண்டிர் தெரு.
‘குறத்தி முடுக்’ கின் பிரவாகத்தில் அமிழ்ந்து மூச்சுத்திணறும் பெண்கள் ஒருபுறம்; சந்தர்ப்பவசத்தால் சிக்கிக்கொண்ட தொழிலுக்கு உடம்பையும் கொஞ்சமும் மங்கிவிடாதபடி தான் அடைகாக்கும் கனவுக்கு மனத்தையும் கொடுத்து நீர் ஒட்டாத இலைபோல வாழும் தங்கம் மறுபுறம்;இருதரப்பையும் ஒரு மாயக்கோடுபோல இணைக்கும் பத்திரிகையாளன் என மூன்று தரப்புகளின் சங்கமம் இந்தக் குறுநாவல்.