அரசியலில் செல்வாக்குள்ள ஒரு குடும்பத்தில் நிகழும் கொலைகளை நோக்கி இட்டுச்செல்லும் சம்பவங்களில் தொடங்கும் கதை,வெறுமனே யார் கொலை செய்தது என்பதைத் தாண்டிப் பல தளங்களில் மர்ம நாவல்களைவிட விறுவிறுப்புடன் சொல்லப்பட்டிருக்கிறது.காதல்,கவிதையின் குரல்,கலையின் ஆற்றுப்படுத்தும் ஆற்றல்,அரசியல்,புரட்சி,தென்னமெரிக்க வரலாறு என பலவும் இக்கதையாகவும் இக்கதையின் அடித்தளமாகவும் இருக்கின்றன.1980களீல் தென்னமெரிக்காவின் அரசியல் நிலையற்ற காலங்களைப் பற்றிய சில பார்வைகளின் தொகுப்பாகவும் அரசியல் ஒடுக்குமுறையும் அதனிடையேயான சில தனிமனிதர்களின் மீட்சியுமே இந்நாவல்.