இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களின் மூதாதையர்கள் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பு ஆங்கிலேயர்களின் வருகை, புயல், வெள்ளம், பஞ்சம் ஆகிய கூறுகளால் பலரும் இடப்பெயர்ச்சிகொண்டவர்கள்.. 16ம் நூற்றாண்டுகளில் ஆந்திராவிலிருந்து இடம் பெயர்ந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குடியேறிய பலரின் மூலகதைகள் நாவலின் அடிப்படையாக அமைந்திருககிறது. ஆபரணத்தொழிலில் ஈடுபட்டிருந்த 500 வருடத்திற்கும் மேலான பாரம்பரியத்தைககொண்ட ஒரு சமூகத்தின், ஒரு பிராந்தியத்தின் 150 ஆண்டுகளின் சரித்திரம் இங்கே பேசப்படுகிறது