காஃப்காவின் நாய்க்குட்டி
நாம் ஒவ்வொருவருமே பொன், பொருள், புகழ், த்த்துவம், விடை என்று ஏதோ ஒன்றைத் துரத்தியபடி ஓடிக்கொண்டிருக்கிறோம். அவ்வோட்ட்த்தையே வாழ்வென நம்பவும் செய்கிறோம். அவ்விதமாகவே இந்நாவலின் மையப் பாத்திரங்களும் தாங்கள் அவாவுற்ற ஒன்றின் பொருட்டு அல்ல்லிற்று அலைகிறார்கள். அத்தேடலின் கதை புதுச்சேரியிலும் யாழ்பாணத்திலும் தொடங்கி, பிரான்ஸில் வளர்ந்து. செக் குடியரசில் முடிகிறது. தேடியலைந்த்தைக் கண்ட்டைந்தார்களா? அதற்காக அவர்கள் கொடித்த விலை என்ன? அடைந்த கணத்தில் அவ்வாசைகளின் மதிப்பென்ன? என்பதான கேள்விகளுடன், கதை முடியுமிட்த்திலிருந்து ஒரு வாசகன் தனக்குள் தேட்த் தொடங்கினால் அதுவே இந்நாவலின் வெற்றி.