கடல்
சமஸின் இந்தக் கட்டுரைகள் கடல் சார் வாழ்க்கை பற்றியும் கடலை நம்பி வாழ்வும் மனிதர்கள் பற்றியும் கரிசனத்தோடு பேசுகின்றன. சமூகத்தின் விளிம்பில் வாழும் மனிதர்களின் வரலாற்றை இவை சொல்கின்றன.
பல ஊர்களையும் நிலங்களையும் மலைகளையும் கடல்வெளிகளையும் அவை சார்ந்த வாழ்க்கையையும் இந்த நூலின் மூலம் அறிந்துகொள்ளலாம். இதில் வரும் மக்கள் மொழி மிகவும் முக்கியமானது. ஒரு மகத்தான இலக்கியவாதி தனது படைப்புகளின் மூலம் தன் மொழிக்குச் செய்யக் கூடிய பங்களிப்பை இந்த நூலின் மனிதர்கள் செய்கிறார்கள். அவர்களின் பேச்சுமொழியை ஒரு தேர்ந்த எழுத்துக் கலைஞனின் நுட்பத்துடன் சமஸ் பதிவுசெய்திருக்கிறார்.
வெகுஜனப் பத்திரிகைக் கட்டுரைகள் எவ்வித ஆழமோ, ஆய்வோ இன்றி எழுதப்படுபவை என்னும் பொதுவான குற்றச்சாட்டுக்கு மாறாக ஆழமாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இவை.