கடலை எதிர்த்து, காற்றைக் கிழித்து, அலையோடு போராடி மழை, வெயில், புயல் அனைத்தையும் தாங்கி திக்குத் தெரியாத பரந்து விரிந்த கடற்பரப்பிலும் வாழ்வைத் தேடும் மீனவன் வாழ்வின் பண்புகளையும் வாழ்விக்கும் குணங்களையும் இன்னமும் இழந்து விடவில்லை என்பதை இந்நூல் எடுத்து இயம்புகிறது.
- அருட்பணி.லீ.செல்வராஜ்
கடல் நீர் நடுவே பயணிக்கும்போது வாசகனுக்கு பல்வேறு மீன்களின் ஊடுருவல் கிடைக்கும், மாறுபட்ட கால நிலைகள் கிடைக்கும், உப்பு சுவை கிடைக்கும், உயிருக்கான மூச்சுத் திணறலும் இருக்கும். மானுடக்குலம் செழிப்புற எல்லோரும் ஒரே நிலை தொழிலை செய்தால் அது வளர்ச்சியில்லை. எனவே அவரவர் சார்ந்த தொழில்கள் மறப்படாமல் வளர்க்க வேண்டுமென்ற கருத்தையும், பசியும், பட்டினியும் ஒரு காலத்தில் ஏற்றுக் கொள்ள முடிந்தது என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார் ஆசிரியர்.
- மலர்வதி (நாவலாசிரியர்)
No product review yet. Be the first to review this product.