இதய வாசல்
சமீராவின் வாழ்க்கையில் வருகை வித்தியாசமான சூழ்நிலையில் நிகழ்கிறது. அடுத்தநாள் நடக்கவிருக்கும் அவனுடைய் திருமணம் எதிர்பாராத ஒரு தொலைபேசி அழைப்பின் காரணமாக நின்று விடுகிறது.
நன்றாகப் படித்து, வேலைக்குப் போய் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற லட்சியம் சமீராவுக்கு. உடனே மணமுடித்து மகளை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற தவிப்பு அவளுடைய தாய்க்கு.
தியாகராஜனின் சதியினால் மறுநாள் நடக்கவிருந்த அனிருத்தின் திருமணம் நின்று போகிறது. தந்தையின் மீது எந்தக் களங்கமும் வரக்கூடாது என்று அனிருத் தியாகராஜன் சொன்னதற்குத் தலை வணங்குகிறான். தியாகராஜனின் வாழ்க்கையில் இருக்கும் ரகசியத்தை எப்படியாவது தெரிந்து கொண்டு அவனுடைய ஆளுமையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று நினைக்கிறான். சமீராவின் துணையை நாடுகிறான். அவன் வாழ்க்கையில் இடம் பெறப் போவது சுபாவா? சமீராவா?