தமிழில் - சிங்கராயர்
கென்யாவைக் களமாகக் கொண்ட இந்த நாவலில், எளிய மக்களின் வாழ்க்கை அந்நாட்டு அரசால் எவ்வாறு சிதைவுண்டது என்று உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளது. கென்ய மக்களின் வாழ்வையும் வலியையும் படம்பிடித்துக் காட்டுகிறது.
••
மொழி மற்றும் கலாச்சாரத் தடைகளைக் கடந்து செல்லும் எழுத்தாளர்களில் கூகி வா தியாங்கோவும் ஒருவர். முதலில் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கினார். பின்னர் மொழிக்கு எதிரான காலனித்துவவாதிகளின் எதிர்ப்பின் அடையாளமாக அவரது தாய்மொழியான கிகுயூ மற்றும் ஸ்வாஹிலி மொழியில் எழுதினார். அரசுக்கு எதிரான கருத்துகளால் 1970இல் கென்ய அரசால் கைது செய்யப்பட்டார். கென்யாவில் பிறந்த கூகி, தனது நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் வசிக்கிறார். சிலுவையில் தொங்கும் சாத்தான், கறுப்பின மந்திரவாதி, தேம்பி அழாதே பாப்பா ஆகிய நாவல்களும் பரவலான வரவேற்பைப் பெற்றவை.