இரண்டாம் ஜாமங்களின் கதை
சல்மாவின் இந்த நாவல் இஸ்லாமியப் பெண்ணுலகைப் பெண்ணின் கண்களால் பார்க்கிறது. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் ரகசியங்களையும் இச்சைகளையும் அவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளையும் அவர்கள் அடைய விரும்பும் சுதந்திரத்தையும் காதலையும் காமத்தையும் பிறழ்வுகளையும் உடலியல் துன்பங்களையும் சுரண்டல்களையும் நுட்பமாகவும் சமயங்களில் பகிறங்கமாகவும் பகிர்ந்து வைக்கிறது. இந்தப் பார்வை தமிழ்ப் படைப்பில் புதிது.
சல்மா, காலச்சுவடு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்