கீதாஞ்சலி :
காவியக் க்வியோகி தாகூர் ( 1861 – 1941 )
பாரத நாட்டில் இராமாயணம் எழுதிய வால்மீகி, பாரதம் படைத்த வியாசர் ஆகியோருக்குப் பிறகு ஆயிரக்கணக்கான பாக்களாஇ எழுதியவர், இதுவரைத் தாகூரை தவிர வேறு யார் இருக்கிறார் என்று தெரியவில்லை, எனக்கு. எண்பது ஆண்டுகள் சீருடன் வாழ்ந்த தாகூரின் காவியப் படைப்பாக்கம் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு நீடித்தது. கவிதை, நாடகம். இசைகீதம், கதை, நாவல், என்னும் பல்வேறு படைப்புத் துறைகளில் ஆக்கும் கலைத் திறமை கொண்ட தாகூருக்கு ஈடிணையானவர் உலகில் மிகச் சிலரே! ஏழை படும்பாடு ( Les Miserables ), நாட்டர்டாம் கூனன் ( The Hunchback of Notre Dame ) போன்ற நாவல்கள் எழுதிய, மாபெரும் பிரெஞ்ச் இலக்கியப் படைப்பாளி விக்டர் ஹுகோ [ Victor Hugo ( 1802 – 1885 ) ] ஒருவர்தான் தாகூருக்குப் படைப்பில் நிகரானவர் என்று சிலரால் சொல்லப்படுகிறது.